தேசிய இளைஞர் தினம் - வீதி நாடக போட்டி
இந்தியா முழுவதும் சுமார் 33 சதவீதம் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கின்றார்கள். தமிழகத்தில் இந்தியாவிலேயே அதிகமாக 52 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ 97 சதவீத மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கடந்த ஆண்டு உயர்கல்விக்கு சென்று இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக விருதுநகர் திகழ்கிறது என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மூலம் தேசிய இளைஞர் தினம் 2023-2024- யை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான வீதி நாடகப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக மாணவர்களுடைய படைப்பாற்றலை, கற்பனை வளத்தை, கலை ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகவும், அதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போதைய மாணவர்கள் நாளை பல்வேறு துறைகளில் அலுவலர்களாகவோ தொழிலதிபராகவோ தனியார் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வைக்கக்கூடிய நபராகவோ என எந்த ஒரு துறை சார்ந்த பணியிடங்களுக்கு சென்றாலும் இது போன்ற சிந்தனையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். நீங்கள் இருப்பது மட்டுமல்லாமல் நாளை நீங்கள் பணிபுரியும் இடங்களில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் அந்த சமுதாயத்தில் மற்றவர்களை சரியாக வழிநடத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் இதனுடைய நோக்கம். இந்த சிந்தனைகளோடு நீங்கள் இருக்கும் போது உங்களை சார்ந்து பணிபுரிபவர்களுக்கும் உங்களால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதன் மூலம் நீங்கள் சமுதாயத்தில் மதிக்கத்தக்க நபராக உருவாக வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின்; நோக்கம்.
இந்தியா முழுவதும் சுமார் 33 சதவீதம் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கின்றார்கள். தமிழகத்தில் இந்தியாவிலேயே அதிகமாக 52 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ 97 சதவீத மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கடந்த ஆண்டு உயர்கல்விக்கு சென்று இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. இன்று உலக அளவில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை வேலைவாய்ப்பின்மையாகும். அதே நேரத்தில் பல மில்லியன் கணக்கான வேலைகளுக்கு ஆட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. வேலை வாய்ப்பு என்பது எவ்வளவு பெரிய பிரச்சனையோ அதற்கு இணையான பிரச்சனையாக வேலைக்கான தகுதியின்மை இல்லை எனப்படுகிறது.
தாங்கள் படிக்கும் துறையில் மதிப்பெண்களோடு அதற்கான திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் துறை சார்ந்த தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்வதோடு குழுவாக இயங்கக்கூடிய தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குழுவாக இணைந்து செயல்படும்போது, வெற்றிக்கும் நம்முடைய மகிழ்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.