இயற்கையை பாதுகாப்பு: டெல்லியிலிருந்து சைக்கிள் பயணம்
இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் இருந்து சைக்கிள் பயணம்.
பொதுமக்கள் அதிக அளவில் மரங்களை வளர்க்காமல் வெட்டுவதால் இயற்கை பேரிடர் கள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆறு, ஏரி, குளம், கண்மாய்கள், கடல் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் பொதுமக்களால் நாளுக்கு நாள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீர்கெட்டு மாசடைந்து வருகிறது.
பொதுமக்கள் மனது வைத்தால்தான் இயற்கையை காப்பாற்ற முடியும் என்று பொது மக்களுக்கும் கிராமங்களில் உள்ள மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டில்லியை சேர்ந்தவர் ரூபேஷ் குமார் ஹாய் வயது 48. இவர் இந்தியா முழுவதும் இயற்கையை காப்போம் என்ற நோக்கத்துடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். ரூபேஷ் குமார் ராய் வாரணாசி காசி பனாரஸைச் சேர்ந்தவர். இவர் அக்ரோ டூரிசம் மற்றும் இயற்கை எதிர்ப்பு தனியார் மாதிரிகள் என்று பல தேசிய விருதுகளை வென்ற நிறுவனத்தைக் நடத்தி வருகிறார்.
இவர் இருக்கும் பகுதிகளிலும் இந்தியாவில் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் இயற்கை பேரிடர்கள் குடிநீர் பிரச்சினை ஆகியவை இயற்கை பேரிடர்கள் அதிக அளவில் ஏற்படுவதாலும் மக்கள் நாளுக்கு நாள் அதிக அளவில் மரங்களை வெட்டுவதால் இயற்கை சூழல் பாதிப்பு ஏற்படுவதாலும் மக்களுக்கு இயற்கை சூழ்நிலைகளை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நியூ டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை கடந்த 1வருடம் 7 மாத காலமாக சைக்கிளில் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ஹைதராபாத், கர்நாடகா, தமிழ்நாடு என அவர் 7 மாநிலங்கள் வழியாக குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் சைக்கிளில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். பின்னர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தன் கடந்து வந்த பாதையையும் தனக்கு இயற்கை மீது ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் .