கள்ளக்குறிச்சி - தனியார் பள்ளியில் நவராத்திரி கொண்டாட்டம்..!
திருக்கோவிலூர் ஸ்ரீ சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.;
By : King Editorial 24x7
Update: 2023-10-19 12:18 GMT
நவராத்திரி விழா கொண்டாட்டம்
திருக்கோவிலூர் ஸ்ரீ சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் ஒரு வாரமாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு தினமும் தீபாராதனை செய்யப்பட்டது. நவராத்திரி விழாவின் 5வது நாளான இன்று ஸ்ரீ சாரதா வித்யாஷ்ரம் பள்ளியின் செயலாளர் கார்த்திகேயன் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து கொலு பொம்மை நவராத்திரி விழாவும் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், பள்ளி மாணவர்கள் சரஸ்வதி, துர்கா, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவிகளின் பாடல்களை பாடி அசத்தினர்.