நவல்பட்டு தீப்பாஞ்ச அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவெறும்பூா் அருகே உள்ள நவல்பட்டு உள்ள தீப்பாஞ்ச அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

Update: 2024-06-03 11:01 GMT

கும்பிஷேக விழா

திருச்சி மாவட்டம், நவல்பட்டு வடக்குத் தெருவில் தீப்பாஞ்ச அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பரிவாரத் தெய்வங்களான அய்யனாா், பெரியண்ணசாமி, ஒண்டிகருப்பு, மதுரை வீரன், குதிரை, யானை சிலைகள் மற்றும் நூதன கோபுர கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 23-ஆம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் யாகசாலை முகூா்த்தக்கால் நடுதல் உடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 28 ஆம் தேதி துவாக்குடி அய்யனாா் கோயில் பூஜையும், 29 ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்துவரப்பட்டது.

30 ஆம் தேதி காலை கோயில் வீடு பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, நவகிரக ஹோமமும், 31 ஆம் தேதி யாகசாலை நிா்ணயம், விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, 1 ஆம் தேதி இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும்,

ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் நவல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்

Tags:    

Similar News