நீட் தோ்வு குளறுபடிகள்: நீதி கிடைக்க நடவடிக்கை: கனிமொழி
நீட் தோ்வு குளறுபடிகள் காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாணவா்-மாணவிகளுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.
Update: 2024-06-14 05:45 GMT
நீட் தோ்வு குளறுபடிகள் காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாணவா்-மாணவிகளுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நீட் தோ்வு வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவா்-மாணவிகளுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும். மகளிா் உரிமை தொகை விடுபட்டவா்களுக்கு வழங்குவதற்கான பணி விரைவில் தொடங்கப்பட்டு, அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து துறை அமைச்சா் மற்றும் பிரதமரிடம் மக்களவையில் குரல் எழுப்பி கோரிக்கை வைப்போம். தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தரமறுப்பது, வஞ்சிக்கும் செயலாகும். மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வந்துள்ளது என்றாா்.