நீட் விலக்கு, நம் இலக்கு: பேராவூரணியில் திமுக கையெழுத்து இயக்கம் 

நீட் விலக்கு, நம் இலக்கு என்னும், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயிலடியில் நடைபெற்றது.

Update: 2023-11-18 07:16 GMT

கையெழுத்து இயக்கம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீட் விலக்கு, நம் இலக்கு என்னும், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயிலடியில் நடைபெற்றது.  தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி மாணவர் அணி, இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப.சேகர் தலைமை வகித்து கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர், டாக்டர் வி.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்று, நீட் விலக்கு அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.  நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன் (பேராவூரணி தெற்கு), இளங்கோவன் (பேராவூரணி வடக்கு),  மு.கி.முத்துமாணிக்கம் (சேதுபாவாசத்திரம் வடக்கு),  வை.ரவிச்சந்திரன் (சேதுபாவாசத்திரம் தெற்கு), சோம.கண்ணப்பன் (திருவோணம் தெற்கு), பேராவூரணி நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ராஜரெத்தினம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அ.அப்துல் மஜீத், தனபால், சுற்றுச்சூழல் அணி மாநில துணை அமைப்பாளர் வே.கார்த்திகேயன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் குழ.செ.அருள் நம்பி, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அரவிந்த், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் மாணிக்கவாசகம், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் குமார், இலக்கிய அணி ஆனந்தராஜ்,

தகவல் தொழில்நுட்ப அணி மதி மற்றும் திமுகவின் பல்வேறு அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து, இந்திய குடியரசு தலைவருக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது.

Tags:    

Similar News