நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணியில் திமுக சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-05-17 16:54 GMT
நீர் மோர் பந்தல்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி திமுக சார்பாக கழக நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்களுக்கு தினமும் ( 14-ம் நாள்) நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க ஆரணி அண்ணா சிலை மற்றும் பழைய பேருந்துநிலையம் அருகே ஐஸ்கிரீம், கரும்புச்சாரு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆரணி நகர மன்ற தலைவர் மணி, ஆரணி திமுக பொறுப்பாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.