அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்
ஆத்தூர் அருகே செக்கியம்பாளையத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
Update: 2024-05-01 09:03 GMT
தமிழக முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோடை வெயில் தாக்கத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் திறந்து வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பாசமிகு அண்ணன் C.ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நீர் மோர் கம்மங்கூழ் பந்தலை சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார் இதில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர். ஜெயசங்கரன் நரசிங்கபுரம் நகர அம்மா பேரவை செயலாளர் கோபி ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம் பழனிசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.