நாமக்கல்லில் டிரிவ்ஏசியா நிறுவனத்தின் புதிய கிளை; ஜெயகுமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி திறந்து வைப்பு
நாமக்கல்லில் டிரிவ்ஏசியா நிறுவனத்தின் புதிய கிளை அலுவலகத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.;
By : King 24x7 Desk
Update: 2024-04-07 04:13 GMT
Jayakumar Valliyan
Jayakumar Valliyan
நாமக்கல் நகரில் டிரிவ்ஏசியா நிறுவனத்தின் புதிய கிளை அலுவலக திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாணிக்கம் குத்துவிளக்கு ஏற்றிவைத்து வாழ்த்து தெரிவித்தார். உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா, வெளிநாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, விமான டிக்கெட், விசா உள்ளிட்ட பல்வேறு சேவைகளோடு பரமத்தி சாலை, நாமக்கல் நகராட்சியின் பெருந்தலைவர் காமராசர் பேரங்காடியில் தொடங்கப்பட்ட திறப்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் தேவி உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மரக்கடை அருண்குமார், நாமக்கல் நகர செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசன் தலைவர் ரிஸ்வான், செயலாளர் எவரெஸ்ட் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். டிரிவ்ஏசியா ஓவர்சீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தினேஷ் பெரியசாமி, இயக்குனர்கள் கார்த்திகேயன் பெரியசாமி, பார்த்தசாரதி சக்திவேல், நாமக்கல் கிளை அலுவலக பங்குதாரர்கள் மோகன்வேல் மற்றும் லோகநாதன் ஆகியோர் விருந்தினர்களை வரவேற்றனர்.