வடமதுரை அருகே ரூ.1.62 கோடியில் புதிய பாலம்
வடமதுரை அருகே ரூ.1.62 கோடியில் புதிய பாலம் அமைக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-04 10:10 GMT
பால கட்டுமான பணி
பழைய சித்துவார்பட்டி வறட்டாற்றில் ரூ.1.62 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி நடக்கிறது.மலைகளில் சேகரமாகும் மழைநீர் வறட்டாறாக எஸ்.புதுப்பட்டி, வளவிசெட்டிபட்டி,சித்துவார்பட்டி வழியே பிலாத்து பெரிய கண்மாயில் சேர்கிறது.கனமழை நேரத்தில் அதிகளவு வெள்ள நீர் பெருக்கெடுக்கும் இந்த வரட்டாற்றில் பழைய சித்துவார்பட்டி அருகில் சிறுபாலம் இருந்தது.
பாலத்தின் உயரம் குறைவாக இருப்பதால் ஆற்றில் அடித்து வரப்படும் குப்பைகள் பாலத்தின் கண் பகுதியை அடைக்கும்போது வெள்ள நீர் மேவி செல்லும்போது பாலம் சேதமடையும். பின்னர் தற்காலிக சீரமைப்பு பணி மட்டும் நடக்கும்.இங்கு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரூ.1.62 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தற்போது நடக்கிறது.