புதிய பேருந்து நிலையம்: திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் 8 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை வீடியோ கான்பிரன் சிங் மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.;
திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் 8 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை வீடியோ கான்பிரன் சிங் மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், ரூ.30.60 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம்,ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்காவது மண்டல அலுவலகம்,ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் நஞ்சப்பா நகரவை மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள அறிவு சார்ந்த மையம்,ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் இடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் பூங்கா மற்றும் 8 நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ்MLA , வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , தெற்கு மாநகர செயலாளர் டி கே டி முநாகராசன் ,மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் , மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , துணை மேயர் பாலசுப்ரமணியம் , கூட்டணி கட்சியின் மாவட்ட தலைவர்கள்,பகுதி கழகச் செயலாளர்களும், வட்ட கழக செயலாளர்களும், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். Sent from my iPhone