குழித்துறை மறைமாவட்ட  புதிய ஆயர் நியமனம்

கன்னியாகுமரியில் ரோமன் கத்தோலிக்க குழித்துறை மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்பட்டார்.

Update: 2024-01-14 14:16 GMT
குழித்துறை ஆயர் ஆல்பர்ட் ஜார்ஜ் அலக்சாண்டர்

கன்னியாகுமரி மாவட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள் தற்போது  கோட்டார் மறைமாவட்டம்,  குழித்துறை மறை  மாவட்டம் என இரு குழுவாக இயங்கி வருகிறது.   இதில் குழித்துறை மறை மாவட்டம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி உதயமானது.    

 தன்  முதல் ஆயராக ஜெரோம் தாஸ் என்பவர் நியமிக்கப்பட்டு,  2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் ராஜினாமா செய்தார். அதன் பின் மதுரை பேராயராக இருந்த அந்தோணி பப்புசாமி மறைமாவட்ட அப்போஸ்தலிக் பரிபாலராக நியமிக்கப்பட்டார்.         இந்நிலையில் குழித்துறை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நேற்று மாலை ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் என்பவர் நியமிக்கப்பட்டார்.  இதனை ரோமில் இருந்து போப் பிரான்சிஸ்  அறிவித்தார்.        1966 ஆம் ஆண்டு கோட்டார் மறைமாவட்டம் மணவிளை பங்கில் பிறந்த ஆல்பர்ட்  மேல்நிலைப் படிப்பை முடித்துவிட்டு, இளம் குடுக்க பட்டம் பெற்றார். தொடர்ந்து மெய்யியல், இறையியல் கல்வி முடித்தார். 26. 4. 1992 இல் குருவாக திருநிலை படுத்தப்பட்டார்.    

 பெல்ஜியம் நாட்டில் முனைவர் பட்டம் பெற்றார். கோட்டாறு மறை மாவட்ட முதன்மை பணியாளராகவும் பணியாற்றினார். தற்போது திருச்சி புனித பவுல் குருத்துவ கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இந்த தகவல் . குழித்துறை  மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் இருந்து நேற்று மாலை மறை மாவட்ட  தொடர்பாளர் ஏசுரத்தினம் தலைமையில் நிர்வாகிகள் வெளியிட்டனர்.

Tags:    

Similar News