புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி - கல்வி அதிகாரி ஆய்வு
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணியை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.;
Update: 2024-05-15 07:42 GMT

கல்வி அலுவலர்கள் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் எழுத படிக்க தெரியாத அனைவரையும் கண்டறியும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. சூரமங்கலம், ஆணைகவுண்டம்பட்டி, ஊமைகவுண்டம்பட்டி, ராக்கிபட்டி குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியை மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்ககத்தின் இணை இயக்குனர் பொன்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த பணியில் ஈடுபடுவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.