ஒசூரில் புதிய காவல்நிலையம்: காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்

ஒசூரில் காவல்நிலைய எல்லைகளை மாற்றி புதியதாக உதயமான காவல்நிலையத்தை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்.

Update: 2024-03-11 16:06 GMT

காவல் நிலையம் திறப்பு

ஒசூரில் காவல்நிலைய எல்லைகளை மாற்றி புதியதாக உதயமான காவல்நிலையம்: காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர மற்றும் ஒசூர் புறநகர் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகளும்,

பிற மாவட்டத்தவர் வடமாநிலத்தவர்கள் அதிகஅளவில் இருப்பதும், மாநில எல்லை என்பதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது இதற்கு போதுமான காவல்துறையினர் இல்லாததே காரணம் என கூறப்படும் நிலையில் ஒசூர் அட்கோ, சிப்காட், பாகலூர் ஆகிய மூன்று காவல்நிலைய எல்லை பகுதிகளிலிருந்து 9 வருவாய் ஊராட்சிகள்,

ஒரு மாநகர வார்டு பிரிக்கப்பட்டு நல்லூர் என்னும் கிராமத்தில் புதிய காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.. புதிய காவல்நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்த நிலையில் ஒசூர் மாநகர ஆணையாளர் சிநேகா, மாவட்ட கூடுதல் எஸ்பி சங்கு, ஒசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.. ஒசூர், நல்லூர் காவல்நிலைய முதல் ஆய்வாளராக ராணி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் 28 போலிசார் இந்த காவல்நிலையத்தில் பணிபுரிய உள்ளனர் புதிய காவல்நிலைய திறப்பு நிகழ்ச்சியில் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா வீரபத்திரப்பா, முன்னாள் துணை தலைவர் சீனிவாசன், வழக்கறிஞர் திம்மராயப்பா, ராமமூர்த்தி மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்

Tags:    

Similar News