ரூ.56 லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் - அமைச்சர் அடிக்கல்
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் டிம்பர் 20ம் தேதி பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வுகளில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தபோது, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.56 லட்சம் மதிப்பில் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நலத்திட்டங்கள் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பென்னகோணம் TELC அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. . மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் கீழப்பெரம்பலூரில் ரூ.12.00 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மிக விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல எழுமூர், ஆய்குடி மற்றும் குன்னம் ஊராட்சிகளில் இந்தியன் ஆயில் நிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து தலா ரூ.6 லட்சம் வீதம் ரூ.18லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அண்ணாதுரை மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெகநாதன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.