புதிதாக போடப்பட்ட சாலை ஆய்வு!
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தென்றல் நகர் பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-06-27 13:27 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 1-வது மண்டலத்திற்குட்பட்ட 25-வது வார்டு தென்றல் நகர் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கணக்கு மற்றும் வட்டி நிதியின் கீழ் போடப்பட்ட புதிய தார்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அம்ருத் திட்டத்தின் கீழ் கூலிப்பாளையம் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் அளவீடு செய்யும் கருவியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை மாநகர பொறியாளர் கண்ணன் உட்பட பலர் உள்ளனர்.