புதிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு - பள்ளி குழந்தைகளுடன் திறந்து வைத்த எம்.பி

Update: 2023-11-09 01:15 GMT

ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 கரூர் மாவட்டம் கா பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சி.கூடலூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் , கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு துவக்கப்பட்டது. இதற்கு தேவையான உபகரணங்களை தனது தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கி அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளிக்கு சென்ற கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை பள்ளி மாணவ மாணவியருடன் சேர்ந்து ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அப்போது பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கரவொலி எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் வளர்மதி, நன்மதி செல்வி, கலைச்செல்வி, சித்ராதேவி, சி. கூடலூர் மேற்கு ஊராட்சி தலைவர் செந்தில் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News