சென்றாயப்பெருமாள் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

சங்ககிரி அருகேயுள்ள சென்றாயப்பெருமாள் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-01-02 01:19 GMT

சென்றாயப்பெருமாள்

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டியில் ஆங்கில புத்தாண்டினையொட்டி அருள்மிகு சென்றாய பெருமாள் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. இதில் வடுகப்பட்டி சுற்றுவட்டார கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News