அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்; மேலும் பயணிகள் நிழற்குடையையும் அமைச்சர் திறந்து வைத்தார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரம் கிராமத்தில் வெள்ளையாபுரம், T.மீனாட்சிபுரம், திருவிருந்தாள்புரம், ஆமணக்குநத்தம், குருந்தமடம், சுக்கிலநத்தம் ஆகிய 6 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் வேளாண் துறை, வருவாய் துறை, காவல்துறை உள்ளிட்ட 14 துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெற்று பதிவு செய்தனர். மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக அமைக்கபட்டிருந்த ஸ்டால்களை அமைச்சர் பார்வையிட்டார். முன்னதாக வெள்ளையாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 8.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த முகாமில் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்களை தேடி அனைத்து அதிகாரிகளும் சென்று அவர்களின் குறைகளை கேட்டு அதை பதிவு செய்து அதை நிவர்த்தி செய்வதற்காக மக்களுடன் முதல்வர் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இங்கு 14 துறை அதிகாரிகள் வந்து உங்களின் குறைகளை கேட்டு அதை பதிவு செய்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக உங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி உங்களது குறைகளை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்காக நல்ல தருணமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகாமில் பொறுமையாக இருந்து அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள், முதியோர் உதவித்தொகை கிடைக்காதவர்கள் அனைவரும் இந்த முகாமில் பொறுமையாக இருந்து பதிவு செய்யும் போது அதை நாங்கள் செய்து தருகிறோம். இந்த ஆட்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருந்தால்தான் உங்களைத் தேடி பல சலுகைகள் வரும் என பேசினார்.