மார்த்தாண்டம்

Update: 2024-10-03 13:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம் பகுதியில் ரூபாய் 222 கோடி செலவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் நெடுஞ்சாலை துறை எந்த பராமரிப்பு பணிகளும் செய்யவில்லை என புகார்கள் எழுந்துள்ளது.         இந்த நிலையில் கடந்த மே மாதம் மேம்பாலத்தின் மேற்பகுதியில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டு பாலத்தில் உள்ள கம்பிகள் அனைத்தும் வெளியே தெரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை எடுத்து அதை சீரமைக்கப்பட்டது.        இந்த நிலையில் நேற்று மீண்டும் ஏற்கனவே சேதம் அடைந்த பகுதியின் அருகாமையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு பாலத்தில் வட்டமாக குழி விழுந்தது. இந்த தகவல் வெளியானதும், அந்த பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் காங்கிரஸ் சார் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தினர்.       இதை அடுத்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று இரவு சம்பவ இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து பாலத்தின் வழியாக வானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் இன்று 2- வது நாளாக மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் பாலத்தின் கீழ் பகுதியாக செல்வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Similar News