கிராம சபா கூட்டத்தில் மனுக்கள் வழங்கிய பொதுமக்கள்
குமாரபாளையத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்கல் வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் கிராம சபா கூட்டம் ஊராட்சி தலைவி புஷ்பா தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் பலரும் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கினர். விஸ்வநாதன் என்ற விவசாயி, குறிப்பிட்ட சமுதாய மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் மயான நிலத்தில், குறிப்பிட்ட பகுதி மட்டும் மயானத்திற்கு எடுத்துக்கொண்டு, மீதமுள்ள பகுதி, குளம் வெட்டி, அதில் தண்ணீர் தேக்கி வைத்து விவசாயம் செழிப்புற உதவ வேண்டும், யாருக்கும் இதில் இடம் தரக்கூடாது, தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டு வலசு பகுதியில் இருந்த அஞ்சல் நிலையம், தற்போது சில நிர்வாக காரணங்களால், குப்பாண்டபாளையம் பகுதியில் இடமாற்றம் செய்துள்ளனர். இதனை மீண்டும் நமது ஊராட்சி பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாடுகளுக்கு கொட்டகை அமைக்க நிதி உதவி வழங்க வேண்டும், பல வருடங்களாக கேட்டும் பலனில்லை, இப்போது இந்த மட்டுக்கொட்டகை அமைக்க நிது உதவி செய்து தாருங்கள் என்று கேட்க , எனது மாடு, குதிரை, ஆடு ஆகியவைகளை கொண்டு வந்து உள்ளேன், மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி, ஒரு கோடி பனை விதை நடும் பணியில் நானும், நண்பர்கள் பலரும், வேளாண்மை துறை அதிகாரி ஜெயமணி தலைமையில் ஈடுபட்ட போது, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், நாங்கள் பணி விதை நடும் பணியை நிறுத்தினார். வாய்க்கால் ஓரம் பனை விதை வைக்க கூடாது என எச்சரித்தார். மாவட்ட கலெக்டர் கொடுத்த உத்திரவை மீற இவர் யார்? இவர் மீது ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது குறித்து மனு கொடுத்தார். மேலும் மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், தட்டான்குட்டை பகுதியில் நூலகம் அமைக்க இடம் ஒதுக்கி வழங்க மனு கொடுக்கப்பட்டது. அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.