பங்களாபுதூர் அருநாகை மாவட்டம், தரங்கம்பாடி, திருக்கடையூர் பகுதியை சேர்ந்தவர் அகோரமூர்த்தி (45). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இருவரும் தற்போது, ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்துள்ள ஊராட்சிகோட்டை ஜீவா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். கட்டிடத் தொழிலாளியான அகோர மூர்த்தி நேற்று, பங்களாபுதூர் அருகே உள்ள வலையபாளையம், சாமக்காட்டு தோட்டத்தில் கிணற்றின் அருகில் நின்றுகொண்டு, மோட்டார் அறைக்கு மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக கால் இடறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவருடன் வேலை செய்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அகோர மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.