தற்கொலை

பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை;

Update: 2025-03-03 03:28 GMT
ஈரோடு, அக்ரஹாரம், ஜோசப் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன் (50). பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி ஷபீனா (45). இவர்களுக்கு 5 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். காஜாமைதீன் மதுவுக்கு அடிமையாகி அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். மேலும் போதையில் அடிக்கடி, தான் செத்துவிடுவேன் என்றும் கூறி வந்துள்ளார். இந்த நிலையில், காஜா மைதீன் நேற்று முன் தினம் இரவு 11.30 மணியளவில் குடித்துவிட்டு வந்து மனைவி குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கூறிவிட்டு, வீட்டின் கதவை உள்புறமாக தாழிட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டாராம்.இதையடுத்து ஷபீனா தனது குழந்தைகளுடன், அருகில் வசிக்கும் தனது தங்கை வீட்டில் அன்று இரவு தங்கிவிட்டு, நேற்று காலையில் வீட்டு சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் படுக்கை அறையில் காஜா மைதீன் தூக்கில் தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே காஜா மைதீன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News