புகார்

ஈரோடு அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் நிபந்தனை பட்டா நிலங்களை அரசு நிலங்களை விற்பனை செய்த.நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்;

Update: 2025-03-04 02:11 GMT
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த குறிச்சி மலை கிராமத்தை ஒட்டிய பகுதிகளான ஜெயந்தி காலனி, தாளபாளையம் ,கூளக்காபாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளவும் விவசாய பணிகளுக்காகவும் 1981ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் நிபந்தனை பட்டாக்கள் வழங்கபட்டன.இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு போலியான ஆவணங்கள் தயாரித்து ஏழை எளிய மக்களை மிரட்டி அரசு கொடுத்த நிபந்தனை பட்டா இடங்களை மட்டுமில்லாது மற்றொறு அரசுக்கு சொந்தமான நிலங்களையும் மோகன் தனது பெயருக்கும் தனது மனைவி கவிதாவின் பெயருக்கும் அம்மாபேட்டை பத்திர பதிவு அலுவலர் உதவியுடன் மாற்றியுள்ளனர்.மேலும் மாற்றிய இடங்களை சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையும் செய்து உள்ளனர்.மேற்படி அரசுக்கு சொந்தமான நிலம் மற்றும் பட்டா நிலங்களை வருவாய்த்துறையிடம் நிபந்தனை நீக்க உத்தரவு பெறாமல் அம்மாபேட்டை சார் பதிவாளர் மீது நடவடிக்ககோரியும் அரசு இடங்களை போலியான ஆவணங்களை கொண்டு பெற்று விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கைவும் அதே போல அரசின் இடங்கள் மீது கிரயத்தினை ரத்து செய்யக்கோரியும் பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Similar News