கைது

புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது;

Update: 2025-03-04 02:17 GMT
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுவரன் மற்றும் போலீசார் மரப்பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த மல்லிகா (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் குமலன்குட்டை பகுதியில் மளிகை கடையில் வைத்து புகையிலைபொருட்கள் விற்ற குமலன்குட்டை டி.டி.எஸ். காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த சக்திகுமார் (45) என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து தலா 20 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News