போராட்டம்
வரும் 18ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்த முடிவு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பேட்டி;
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது அலி ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 15 லட்சம் குடும்பங்கள் பால் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நிலையில் , 35 லட்சம் லிட்டர் தான் ஆவின் நிர்வாகம் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆரம்ப பால் உற்பத்தி கூட்டுறவு சங்கம் அழிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது. 2022ம் ஆண்டு கொள்முதல் விலையில் 3 ரூபாய் உயர்த்தி 35ரூபாயாக தமிழக அரசு வழங்கியது. அதோடு ஊக்கத்தொகை பல்வேறு மாநிலங்களில் வழங்குவது போன்று ஊக்கத்தொகை 3ரூபாய் மட்டும் தமிழகத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் பால் நிறுவனங்கள் 40ரூபாயக்கு கொள்முதல் விலை வழங்குகிறது. 3.75லட்சம் குடும்பங்கள் ஆவின் நிர்வாகம் பால் வழங்குவதை குறைந்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் களுக்கும் ஊக்கத்தொகை கடந்த மூன்று மாதமாக வழங்கவில்லை. ஆவின் நிர்வாகம் மூன்று மாதம் மேல் காலதாமதம் செய்வதால் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் வகையில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பால் விலைக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நேரடியாக வங்கி கணக்கில் ஊக்கத்தொகை செலுத்துவதாக சொல்கிறார்கள். வரக்கூடிய தேர்தலை கணக்கில் வைத்து கொண்டு செயல்படுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. கடந்த 4வருடங்களில் பாலுக்கு மூன்று ரூபாய் விலை குறைத்ததால் ஆவின் நிர்வாகம் 1000கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.நஷ்டம் ஈடுகட்டும் வகையில் மாநில இழப்பீடு வழங்க வேண்டும்.ஆவின் பாதுகாக்க வேண்டும். ஆரம்ப சங்கம் பாதுகாக்க வேண்டும். அதிக தீவனம் தேவைப்படும் கால்நடைகளுக்கு தீவனம் 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். 18ம் தேதி கறவை மாடுகளுடன் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஆவின் நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்பாட்டம் நடத்த உள்ளோம்.விற்பனை விலை உயர்த்த முடியாமல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு ஆவின் நிர்வாகத்தில் போதுமான சீர்திருத்தம் மூலம் நடவடிக்கை எடுத்தால் பால் கொள்முதல் விலை உயர்த்த முடியும்பசுபால் விலை 35ரூபாயும்,எருமைபால் 41 ரூபாயும் வழங்கப்படுகிறது இதனால் ஆவின் நிர்வாகம் 35ரூபாயை 45ரூபாயும் எருமை பால் 41 ரூபாயா 51ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.