போராட்டம்

ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதை கைவிடக்கோரி குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு;

Update: 2025-03-06 03:40 GMT
ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 330குடியிருப்புகள் கொண்ட 5 மாடிக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.இதில் வீடுகளுக்கு பணம் கட்டிய பயனாளர்களுக்கு குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பழைய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்த குடியிருப்பு வாசிகள் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் முறை கைவிட வேண்டும் எனக்கோரி குலுக்கல் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது 5தளம் என்பதால் வயதானவர்கள் கீழ் தளத்தில் இருந்து வந்த நிலையில் இப்போது குலுக்கல் முறையில் மேல் தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்தால் சிரமமாக இருக்கும் எனவும் கதவு எண் மாறுவதால் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களில் முகவரி மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படும் எனவும் இதனால் பழைய முறையில் வீடுகளில் குடியிருந்த வர்கள் அடிப்படையில் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதற்கு முன்னதாக குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கருங்கல்பாளையம் போலீசார் தடுப்புகள் அமைத்து 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News