Update: 2025-03-15 18:21 GMT
  • whatsapp icon
திருச்சுழியில் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற மாசி பொங்கல் திருவிழா; திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்தும் அக்னி சட்டி ஏந்தியும் வழிபாடு விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவில் திருவிழா கடந்த வாரம் வியாழன் அன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது . இதனை அடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் காலையும் இரவும் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் இன்று பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிகாலை முதலே பக்தர்கள் அம்பாளுக்கு பொங்கலிட்டும் மாவிளக்கு ஏற்றியும் வழிபட்டனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஏராளமானோர் அக்னிசட்டி ஏந்தியும், 21 அடி நீள அலகு குத்தியும், பாதம் வைத்தும், கண்மலர் செலுத்தியும் வழிபட்டனர். இத்திருவிழாவில் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபாடு செய்தனர்

Similar News