கள்ளக்குறிச்சி மாவட்டம் செந்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு (22). இவரது மனைவி பூங்கொடி. தற்போது இத்தம்பதியினர், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சின்னராசுவுக்கு மதுபழக்கம் இருப்பதால், அடிக்கடி மது அருந்தி விட்டு பூங்கொடியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதுபோதையில் வந்த அவர், கரும்பு வெட்டிக்கொண்டிருந்த தனது மனைவி பூங்கொடியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து சென்ற சின்னராசு, அருகேயுள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து, அவரது தாய் சாந்தி அளித்த புகாரின் பேரில், கொடுமுடி போலீசார் விசாரித்து வருகிறார்.