ஈரோடு மாநகராட்சியில் சிறப்பு குழு தூய்மைப் பணியாளர்கள் மூலம் நடைபெற்ற தூய்மைப் பணியை, துணை ஆணையர் தனலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில், வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில், மாஸ் கிளினீங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இது தவிர, சிறப்பு தூய்மை குழு அமைக்கப்பட்டு, ஈரோடு மாநகராட்சி 2வது மண்டலத்தில், தூய்மைப் பணிகள் நேற்று நடைபெற்றது. அப்போது, தூய்மைப் பணிகள் மற்றும் வடிகால் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை, துணை ஆணையர் தனலட்சுமி, மண்டலத்தலைவர் சுப்பிரமணியம் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.