கைது

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது;

Update: 2025-03-19 03:14 GMT
ஈரோடு வடக்கு போலீஸ் எஸ்எஸ்ஐ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சூளை குப்பைக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் நந்தா மோசஸ் என்ற டக்கர் பூபதி (22) என்பதும், அவர் வலி நிவாரணி மாத்திரையை போதை மாத்திரை ஆக விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது‌. இதையடுத்து நந்தா மோசஸை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்

Similar News