பரபரப்பு
சத்தியமங்கலம் அருகே வேட்டை தடுப்பு காவலரை பாம்பு கடித்ததால் பரபரப்பு சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்;
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே பசுவனபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகப்பாம்பு ஒன்று புகுந்து அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தது. அப்போது வேட்டை தடுப்பு காவலர் ராமசாமி பாம்பை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது ராமசாமி பாம்பை லாபகமாக பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நாகப்பாம்பு ராமசாமி கைய கடித்து விட்டது. இதனால் வலியால் துடித்த அவரை வனத்துறையினர் மீட்டு உடனடியாக கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமசாமியை பாம்பு கடித்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.