சிறை

ரவுடி ஜான் கொலை வழக்கில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மூன்று பேர் கோவை சிறையில் அடைப்பு உடல்நலம் தேறியதால் நடவடிக்கை;

Update: 2025-03-31 02:41 GMT
சேலம், கிச்சிப்பாளையம், சுந்தர் தெருவை சேர்ந்தவர் ஜான் (30). இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடி தடி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த 19ஆம் தேதி சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு மனைவி சரண்யா உடன் காரில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் நசியனூர் முள்ளம்பட்டி அருகே ஜான் காரில் மோதி விபத்தை ஏற்படுத்திய மர்ம கும்பல் ஜானை வெட்டி கொலை செய்தது. பின்னர் பிடிக்க வந்த போலீசாரை வெட்டி தப்பி செல்ல முயன்ற சேலம் கிச்சி பாளையத்தை சேர்ந்த சதீஷ் (30) சரவணன் (28), பூபாலன் (36) ஆகிய மூவரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இவர்களுக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர்கள் மூன்று பேரும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று பேரின் உடல்நலம் தேறியதை அரசு மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்து கடந்த 27-ல் டிஸ்சார்ஜ் செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் உடல் நலம் தேர மூவரையும் சித்தோடு போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News