பேட்டி
பெருந்துறை சிப்காட்டில் 10 நாட்களுக்குள் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கும் அமைச்சர் முத்துசாமி பேட்டி;
ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தி.மு.க.வை நினைக்காமல் யாரும் இருக்க முடியாது. இதனால் த.வெக.வினர் திமுகவை விமர்சித்து வருகின்றனர். தி.மு.க அதன் கொள்கையில் அடி பிறளாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கொள்கை பிடிப்புடன் உள்ளது. தந்தை பெரியார், அண்ணா கலைஞர் ஆகியோர் கொண்டு வந்த கொள்கைகளை பின்பற்றி வருகிறது. தமிழ்நாட்டிற்கான நிதி பெறுவது, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றில் உரிமைகளை பெறுவதற்காக மத்திய அரசிடம் போராடி வருகிறோம்.இது அரசியல் அல்ல நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சரியான வழியில் திமுக செயல் பட்டு கொண்டிருக்கிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்.. எடப்பாடியும், செங்கோட்டையனும் அடுத்தடுத்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அ.தி.மு.க.வை அவர்கள் நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் அடிப்படையான எண்ணம். சட்டமன்றத்தில் கூட எதிர்க்கட்சியினர் வருத்தம் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் மதித்து செயல்பட்டு வருகிறார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.திமுக எப்போதும் எந்த கட்சியுடன் ரகசியமாக கூட்டணி வைத்தது இல்லை, பாஜகவுடன் கூட்டணி வைத்தது கூட கலைஞர் நேரடியாக வெளிப்படையாக அறிவித்துவிட்டு தான் மேற்கொண்டார். எப்போதும் ரகசியமாக யாருடனும் கூட்டணி வைக்கவில்லை, திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. ஓடையில் ஆலை கழிவுநீர் கலந்த விவகாரத்தில் அதனை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதனை சுத்திகரிப்பதற்கான தொழில் வாய்ப்புகள் இல்லை தற்பொழுது நச்சு ஏற்படுத்திய ஆலை உரிமையாளர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த தண்ணீரை எடுத்து சுத்திகரித்து சுத்தம் செய்து தருவதாக தெரிவித்து இருக்கின்றார் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் 20 ஆண்டுகளாக தேங்கி விட்ட பிரச்சனை படிப்படியாக சீரமைத்து இருந்தால் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. நல்லா ஓடையில் செல்லும் தண்ணீரை கண்காணிக்க வெளிப்படையாக இரண்டு இடங்களில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் இரண்டு இடங்களில் மீட்டர் பொருத்தப்படும்.. ஏற்கனவே சிப்காட் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலத்தடி நீரை எடுத்து சுத்தம் செய்து அதை ஆலைகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிதாக, பொது சுத்திகரிப்பு நிலையம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் கோரியவர்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு மீண்டும் இரண்டாவது முறை ஒப்பந்தம் விடப்பட்டிருக்கிறது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அடுத்த 10 நாட்களுக்குள்ளாக பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.