தூத்துக்குடியில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகள் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.;

Update: 2025-06-28 04:43 GMT
தூத்துக்குடியில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகளை அமைச்சர் கீதாஜீவன் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். தூத்துக்குடியில் மேல அலங்கார தட்டு, செயின்ட் மேரிஸ் காலனி, தருவை மைதானம், ஐயப்ப நகர், இந்திரா நகர், மற்றும் திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில், 606 மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் 63 KVA திறன் கொண்ட ஒரு மின்மாற்றி, 100 KVA திறன் கொண்ட 5 மின்மாற்றிகள் என 6 புதிய மின் மாற்றிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சஹர் பானு, செயற்பொறியாளர் நகர் (பொறுப்பு) சின்னதுரை, தமிழ்நாடு மின் பகிர்மான செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி செயற்பொறியாளர்கள் உமையொரு பாகம், பிரேம்குமார், உதவி பொறியாளர்கள் குமார், சொரிமுத்து, ஜோசப், சத்யராஜ் ஆகிய மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர அவைத் தலைவர் ஜேசுதாஸ், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்சலின், ஜெயசீலி, வட்டச் செயலாளர்கள் டென்சிங், ராஜா மணி, செல்வராஜ், சுரேஷ், மகளிர் அணி கமலி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News