Update: 2025-06-28 11:39 GMT
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் வருகின்ற ஜூலை 7- அன்று நடைபெற உள்ள குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அமைச்சர். அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. பி.என்.ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், ஆகியோர் தலைமையில் இன்று (28.06.2025), நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.தி.புவனேஷ் ராம், மேயர் திரு.பெ.ஜெகன், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News