தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா : அக்னி சட்டி ஊர்வலம்!;
தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் ஆனி பெரும் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் அக்னி சட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர். தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் ஆனி பெருந்திருவிழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஆடவர் தீச்சட்டி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் உலா வந்து அம்மனை வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.