Update: 2025-07-14 09:00 GMT
கோவில்பட்டியில் தனியார் மின்சார இரு சக்கர வாகனம் விற்பனை நிலைய ஊழியருக்கு அரிவாள் வெட்டு - போலீசார் விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் தனியார் மின்சார இரு சக்கர வாகனம் விற்பனை நிலையம் உள்ளது. இதில் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சதிஷ் குமார் சர்வீஸ் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இன்று காலையில் வழக்கம் போல சதிஷ் குமார் வேலைக்கு வந்துள்ளார் ‌ அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அரிவாளால் சதிஷ் குமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சதிஷ் குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News