ஜெயங்கொண்டம் பகுதியில் வண்டல் மண் எடுப்பதற்கு ரூபாய் 6000 லஞ்சம் வாங்கியதாக ஜெயங்கொண்டம் தாசில்தார் மற்றும் குண்டவெளி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விசிகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2025-08-26 08:37 GMT
அரியலூர், ஆக.26- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தற்போது பல்வேறு ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாய நிலத்திற்கு வண்டல் மண் எடுக்க வருபவர்களிடம் ஜெயங்கொண்டம் தாசில்தார் சம்பத் மற்றும் குண்டவெளி வருவாய் ஆய்வாளர் சக்தி முருகன் ஆகிய இருவரும் வணிக நோக்கில் ரூபாய் 6000 லஞ்சமாக பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் இவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்து ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுவரொட்டி ஒட்டியுள்னர்.திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே அதிகாரிகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டி இருப்பது ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News