போலீசார் நடவடிக்கை;

Update: 2025-08-30 03:04 GMT
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது42). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தங்கராஜ் (31). இவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரவிக்குமார் நேற்று தங்கராஜை கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை ைகது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணுடன் பழகிய விவகாரத்தில் கத்திக்குத்து விழுந்தது தெரியவந்தது.

Similar News