போலீசார் நடவடிக்கை;

Update: 2025-09-03 02:57 GMT
சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசு (வயது 43). கந்து வட்டிக்காரர். இவர், நேற்று அதே பகுதியை சேரந்த 8 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி தமிழரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Similar News