TET வழக்கில் பழைய ஆசிரியர்களுக்கு பாதிப்பு இல்லை – பகுதி நேர ஆசிரியர்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.;

Update: 2025-09-17 08:04 GMT
கோவை காளபட்டியில் தனியார் சர்வதேச பாடத்திட்டப் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கு வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகவும், பழைய காலத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு அந்த சட்டம் பொருந்தாது என்பதால் வழக்கில் வெற்றி பெறுவோம் என்றும், ஆசிரியர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் உறுதியளித்தார். மேலும், பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்பாக தலைமைச் செயலாளர் மூலமாக ஆலோசனை நடைபெற்றுள்ளதாகவும், அவர்களின் பணியை மதித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு அரசு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கி அவர்களின் கல்வியைத் தொடர உதவுகிறது; பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு கல்லூரி அல்லது திறன் மேம்பாட்டுக்கும் அரசு துணை நிற்கும் என்று முதல்வர் அறிவித்திருப்பதாகவும் கூறினார். தமிழக வெற்றி கழகம் திமுகவை குறிவைக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றார்.

Similar News