கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் ஆண்டு விழா; சிறந்த மாணவர்களுக்கு ஆட்சித்தலைவர் பாராட்டு;
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (10.10.2025) நடைபெற்ற 76வது ஆண்டு விழாவில், கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா சிறப்பாக நடைபெற்றது.