திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் நடக்கவில்லை: எஸ்பி

திருப்பத்தூர் மாவட்டத்தில் வட மாநிலத்தவர்களால் குழந்தை கடத்தல் ஏதும் நடக்கவில்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Update: 2024-03-08 12:53 GMT

மாவட்ட எஸ்பி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வட மாநிலத்தவர்களால் குழந்தை கடத்தல் ஏதும் நடக்கவில்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வடமாளித்தவர்களால் குழந்தை கடத்தல் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களும் கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வட மாநில நபர்களால் கொடுமை கடத்தல் அரங்கேறி வருகிறது என்ன சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பி வருகின்றனர் அது முற்றிலும் தவறானது இதுவரை திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெறவில்லை.

இதுபோல் வதந்திகளை திருப்பத்துர் மாவட்ட மக்கள் நம்புவோ! பரப்பவோ! வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். சந்தேகப்படியாக நபர்களை சந்தித்தால் காவல்துறைக்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசியில் வாயிலாக தகவலை தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கு எதிராக வன்முறையிலோ துன்புறுத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்‌.

உண்மைக்கு மாறான குழந்தை கடத்தல் சம்பந்தமாக தவறான தகவல் பரப்பவும் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தார். வடமாநில நபர்களை வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி மூலம் கண்காணித்து வருகிறோம்.

மேலும் வட மாநிலத்தின் நபர்களால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிநவீன கேமராக்கள் அமைக்கவும் வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News