தமிழகத்தில் எந்த சக்தியாலும் கலவரத்தை உருவாக்க முடியாது - அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது ஒருபோதும் தமிழக அரசு அதை அனுமதிக்காது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Update: 2024-06-13 05:25 GMT

புதுக்கோட்டையில் காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தில் தண்ணீர் சேமித்து வைக்கும் இடமான கவிநாடு கம்மாய் 1200 ஏக்கர் பரப்பளவு கொண்டது இதில் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையும் கருவேல மரங்கள் சூழ்ந்து இருப்பதை அகற்ற வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் அமைப்புடன் இணைந்து கவிநாடு கம்மாயை தூர்வாரும் பணியையும் கருவேல மரங்கள் அகற்றும் பணியையும் அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம் பி எம் எம் அப்துல்லா எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஐந்து பொக்லைன் இயந்திரம் கொண்டு இந்த பணிகள் நடைபெற்று வருகிறது

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி,  தனியார் அமைப்புடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து கவிநாடு கம்மாயை தூர் வாரும் பணியையும் கருவேல மரங்கள் அகற்றும் பணியும் இன்று முதல் தொடங்கியுள்ளது இந்த பணி நிறைவடைந்த உடன் வெளிநாட்டு பறவைகள் வரும் இடமாகவும் இது மாற்றப்பட உள்ளது கடந்த ஆட்சி காலத்தில் காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டாலும் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறவில்லை. அதனால் தான் இந்த பணிகள் தொய்வாக நடந்து வந்தது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது பணிகள் விரைவில் முடிவடையும் தேவைப்பட்டால் நீர்வளத்துறை சார்பில் அந்த நேரத்தில் மீண்டும் தூர்வாரும்பணி நடைபெறும்

கடந்த ஆட்சி காலத்தில் தூர்வாரும் பணிகள் எவ்வாறு நடைபெற்றது என்பது அந்தந்த பகுதி மக்களுக்கு தெரியும் மழை ஆரம்பிக்கின்ற நேரத்தில் தான் கடந்த காலத்தில் தூர்வாரும் பணி நடைபெறும் மழை தொடங்கியுடன் பணிகள் நிறுத்தப்பட்டு நிதிகள் செலவிடப்பட்டதாக கணக்கு எழுதப்படும் ஆனால் திமுக அரசு முறையாக தூர் வாரும் பணியை நடத்தி வருகிறது தமிழகத்தில் காடுகளை வளர்ப்பதற்கு மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழர் முதல்வர் காடுகளை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று முக்கியத்துவம் அளித்து செயலாற்றுகிறார் தற்போது காடுகள் இருக்கும் பரப்பளவு அதிகரித்துதான் உள்ளது குறையவில்லை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் அகற்றப்பட்டாலும் அகற்றப்பட்ட மரங்களுக்கு நிகராக பத்து மடங்கு மரங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் தைலம் மர காடுகளால் பாதிக்கப்படுவதாக கூறியிருந்தார்கள் வனத்துறை சார்பில் பயிரிடப்பட்ட தைலம் மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு வருகிறது விவசாய நிலங்களை பறிமுதல் செய்து எங்கேயும் சோலார் பிளான்ட் கள் அமைக்கப்படுவது கிடையாது அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களிடமே அந்த நிலம் மீட்டுக் கொடுக்கப்படும்.

   நீட் தேர்வு குளறுபடி இன்று நாடே பார்த்துக் கொண்டுள்ளது இதுகுறித்து வழக்கும் நடைபெற்று வருகிறது ஆனால் உச்ச நீதிமன்றம் மாணவர் சேர்க்கையை அனுமதிக்க கூறியுள்ளது இருப்பினும் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது இது முடிந்த பிறகு நீட் தேர்வுக்கு ஒரு முடிவுக்கு வரும் கலவரம் ஏற்படுத்தினால் தான் பாஜக வளர முடியும் என்று இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூறிய ஆடியோ வைரலான நிலையில் இதுகுறித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது ஒருபோதும் தமிழக அரசு  அனுமதிக்காது. என்றார் 

Tags:    

Similar News