ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர், தாம்பரம் சாலைகளில் செல்ல தடை

Update: 2023-12-08 02:45 GMT

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் பலத்த காற்றுடன் கனமழை ஆனது நேற்று முன்தினம்  இரவில் இருந்து பெய்து பெய்து வருகிறது. இந்த நிலையில் பிள்ளைப்பாக்கம் ஏரி நிரம்பி அதிக அளவில் உபரி நீர் கலங்கள் வழியாக வெளியேறி வருவதால் பிள்ளைப்பாக்கம் சிப்காட் அலுவலகம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்து ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலை மற்றும் தாம்பரம் செல்லும் சாலை முழுவதுமாக சாலை குறுக்கே வெள்ளம் போல் மழை நீர் சென்று கொண்டிருக்கிறது.

இதனால் அப்பகுதிக்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வெள்ளநீரில் சிக்கித் தவித்த இருசக்கர வாகனங்களை மீட்டு சாலையின் நடுவே தடுப்பு அமைத்து அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் தாம்பரம் மற்றும் குன்றத்தூர் வழியாக சென்னை செல்கிறவர்கள் அனைவரும் 10 கிலோமீட்டர் மேலாக சுற்றி ஒரகடம் வழியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழியாக வாகனங்கள் செல்லும் நிலையில் போக்குவரத்து நெரிசல் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை குறைவதும் தாம்பரம், இருங்காட்டுக்கோட்டை குன்றத்தூர் மற்றும் சிப்காட் பகுதிகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் பெரிதும் பாதிப்பு ஏற்படும் . தற்போது மழை காரணமாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அவ்வழியாக உள்ள கிராம பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு இவ்வழியாக வரும் நிலையில் இதுபோன்று ஏற்பட்டுள்ளது

Tags:    

Similar News