தூத்துக்குடி தொகுதியில் 2பேர் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ;

Update: 2024-03-21 01:28 GMT

வேட்புமனு தாக்கல்

தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை  வேட்பாளர்  என்.ராதாகிருஷ்ணன் என்பவர் இன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார்.  நேற்று காலை சுயேட்சை  வேட்பாளர் ஜெ.சிவநேஸ்வரன் என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்தார். தூத்துக்குடி தொகுதியில் இதுவரை சுயேட்சை  வேட்பாளர்கள் 2பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News