வடமாநில தொழிலாளி குத்திக்கொலை

சிவகாசியில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;

Update: 2024-07-01 09:28 GMT
 சிவகாசியில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகாசி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி சரமரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40).இவருக்கு சொந்தமான சிமெண்டு செங்கல் தயாரிக்கும் செங்கல் சூளை நாரணாபுரம்புதூர் பகுதியில் இயங்கி வருகிறது.இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் சிலர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பொட்டலில் உட்கார்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ஒருவருக்கொருவர் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதில் பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்த காங்ரேஷ் புய்யான் (43) என்ற தொழிலாளியை உடன் மது அருந்திய சில வட மாநில தொழிலாளர்கள் சேர்ந்து சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இன்று காலையில் அந்தப் பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த காங்ரேஷ் புய்யான் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிவகாசி கிழக்கு போலீசார் காங்ரேஷ் புய்யான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் தொடர்பாக காங்ரேஷ் புய்யான் உடன் மது அருந்திய 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் .

Tags:    

Similar News