ராமேஸ்வரம் மீனவர்களுக்காக போராட்டம் அறிவிப்பு
ராமநாதபுரம் மீனவர் பிரச்சனையில் தலையிடாத மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 27ஆம் தேதி பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் காலை 10 மணி அளவில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாடோ தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் அவர் தெரிவித்திருப்பது, ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு எஸ் ராஜேஷ்குமார் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாடோ ஆகியோர் முன்னிலையிலும் பிப்ரவரி 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் மீனவர்களை ஒன்று திரட்டி கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பிப்ரவரி 28ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதலத்திற்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் முன்னிலையில் இந்த போராட்டங்கள் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.