விக்ரமசிங்கபுரத்தில் வர்த்தக சங்கம் சார்பில் போராட்டம் அறிவிப்பு

விக்ரமசிங்கபுரத்தில் வர்த்தக சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கபட்டுள்ளது.

Update: 2024-06-16 11:07 GMT

கடையடைப்பு போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் வர்த்தக சங்கம் சார்பில் வருகின்ற 19ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டமானது அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும், பாபநாசம் தலையணையில் எப்பொழுதும் போல் மக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தியும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News